ஜெ
இந்திரப்பிரஸ்தத்தின்
நகரக்காட்சியை வாசித்துக்கொண்டே இருந்தேன். அர்ஜுனன் உள்ளே போகும் காட்சியின் இன்னொருவடிவம்.
அன்றைக்குக் கட்டப்படுகிறது. இன்றைக்குப் பொலிகிறது. அதன் பிரம்மாண்டம் அப்படியே நுட்பமாக
இருக்கிறது. பழைய சித்தரிப்பு அப்படியே புளோஅப் ஆகிவிட்டிருக்கிறது. நகரவர்ணனைதான்
நம் காவியங்களின் சிறப்பே. அதை வெண்முரசில் மீண்டும் மீண்டும் பார்க்கமுடிகிறது
சரவணன்