ஜெ
இந்தியாமுழுக்க
பல்வேறுகுலங்களாக பிரிந்திருக்கும் நாகர்களின் கதைகளை வாசித்துப்போகும்போது அவற்றிலுள்ள
முரண்பாடுகள்தான் அதிகமும் கண்ணுக்குப்படுகின்றன. இதை நான் முன்னரே கவனித்திருக்கிறேன்.
மானசாதேவி வாசுகியின் தங்கை என வரும். ஆனால் அவள் மகன் ஆஸ்திகன் மகாபாரதப்போர் முடிந்த
இரண்டாம்தலைமுறையைச் சேர்ந்தவன். இப்படி காலமுரண்பாடுகள். கதை முரண்பாடுகள் பலவகையானவை
மகா பாரதம் எழுதினபிற்பாடு பலவகையான நாகர்கதைகளை
உள்ளே செருகினார்களென்று கொள்ள இடமிருக்கிறது. ஆகவே அவற்றுக்கு ஒருங்கிணைப்பே இல்லை.
இதேபோல பரசுராமர் கதைக்கும் தொடர்ச்சியும் கால முறையும் இல்லை. துண்டுதுண்டாக நினைத்ததுபோல
வரும்
நீங்கள் புனைவுத்திறத்தால்
எல்லா கதைகளையும் ஒன்றாக ஆக்கிவிட்டிருக்கிறீர்கள். வியப்புடன் பார்க்கிறேன்
சுவாமி