Wednesday, February 24, 2016

கதைகூறுமுறைகள்


அன்புள்ள ஜெமோ

வெண்முரசின் அமைப்பு கிளாஸிக்தன்மை கொன்டது என்று தெரியும். ஆகவே அதில் பல்வேறு கதைகூறுமுறைகள் வந்துகொண்டே இருக்கின்றன. உணர்ச்சிகரமான கதைகள். கொந்தளிப்பானவை. மொழிவிளையாட்டுக்கள். என்னென்னமோ வந்துகொன்டிருக்கின்றன. அங்கதம் அடிக்கடி வருகிறது. பீமனின் சொற்களிலும் அங்கதம் உள்ளது. ஆனால் வண்ணக்கடல் நாவலுக்குப்பின் நேரடியாக அங்கத நாடகம் இப்போதுதான் வருகிறது என நினைக்கிறேன். திடீரென்று அது தொடங்கியது கொஞ்டம் ஆச்சரியமாக இருந்தாலும் சுதாரித்துக்கொன்டு வாசிக்க ஆரம்பித்தேன்

பலகதைகளை இப்படி கலைவடிவங்கள் வழியாகச் சொல்கிறீர்கள். ஆச்சரியமான உத்திதான். கிருஷ்ணனின் கதைகள் எல்லாமே நாடகங்களாகவே வருகின்றன. சூதர்பாடல்களாக வருகின்றன பல விஷயங்கள். இது நிகழ்ச்சிகள் நிகழ்வதும் அவை பாடலாக ஆவதும் ஒரே சமயம் மாறி மாறி நடந்துகொண்டிருப்பதான உணர்ச்சியை அளிக்கிறது. அது ஒரு வகையான காவியநிலை என்று தோன்றுகிறது. நாடகத்திலெயேஎ பிரம்மனுக்கு தான் உண்மையான ஆளா எழுதப்படும் கதாபாத்திரமா என்ற சந்தேகம் வருவது உச்சம்

மனோகர்