பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.
“இந்த நாகலந்தீவின் வேர்ப்படலம் நாங்கள்” என்றாள் முதுமகள். கர்ணன் “பாரதவர்ஷத்தை சொல்கிறீர்களா?” என்றான். கையசைத்து “அது உங்கள் சொல் இந்நிலத்தின் பெயர் நாகலந்தீவு. என்றும் அவ்வாறே அது இருக்கும்” என்றாள்."
ஒரு சின்ன சந்தேகம் ஜம்பூத்வீபம் -நாவலந்தீவு என்றுதானே வழக்கமாக நமது 'பாரதவர்ஷம்' அழைக்கப்படுகிறது,நீங்கள் நாகலந்தீவு என்று சொல்லுகிறீர்களே இரண்டும் ஒன்றுதானே?
அன்புடன்,
அ .சேஷகிரி.
அன்புள்ள சேஷகிரி
நாகர்களிடமிருப்பது முற்றிலும் வேறு தொன்மம். நாவல்- ஜம்பு மரம் இவர்களின் மரம். அவரக்ள் பிலக்ஷமரத்தை அத்திமரத்தை முக்கியமாக நினைக்கிறார்கள். அதுவே பின்னர் ஆலமரமாகியது, அவர்களின் பிரபஞ்சம், அவர்களின் இந்தியாவே வேறு
ஜெ