Monday, February 22, 2016

துரியன்





ஜெ

வெண்முரசின் நாவல்களில் வெய்யோன் ஒரு தனிச்சிறப்பான நாவல். ஒரு கதைநாயகனின் உள்ளம் திரிபடைவதைத்தான் காட்ட நினைத்தீர்கள். ஆனால் கர்ணனைவிட துரியன் பெரிய கதாபாத்திரமாக எழுந்துவந்துவிட்டான். அவனுடைய எழுச்சி நாவலை வேறெங்கோ கொண்டுசென்றுவிட்டதென்று தோன்றுகிறது

கதைமாந்தரின் உடல்மொழியை மிகநுட்பமாகச் சொல்லிக்கொண்டே செல்கிறீர்கள். அவர்களின் பேச்சுமட்டும் அல்ல. துரியன் தொடை தட்டுவதும் கர்ணன் மீசையை முறுக்குவதும் அவர்களை கண்ணெதிரே காட்டிவிடுகின்றன

மனோகர்