ஜெ
குறைவாகச் சொல்லப்பட்டாலும் இந்திரப்பிரஸ்தத்தின் வர்ணனை அபாரமானது. அதன் பிரம்மாண்டம். செழிப்பு. ஆடம்பரம். எல்லாமே அற்புதமான நுணுக்கங்களுடன் வந்துள்ளது. ஒவ்வொரு முறையும் அதன் யமுனைக்கரைப்படித்துறை ஒவ்வொரு வகையாக விவரிக்கப்படுகிறது
அந்நகரம் ஆழத்திலும் மேலேயும் இரு முகங்கள் கொண்டது என்பதை நுட்பமாகக் காட்டிவிட்டீர்கள். அந்தத்தெருவில் ஒரு சூதன் முகமும் பின்உடலும் மாற்றி மாற்றிக்காட்டி ஆடுகிறான். அவன் இந்திரப்பிரஸ்தத்தைக் குறிப்பால் உணர்த்துகிறான்
அதே தெருவில் ஒருவன் ஒரு பெரிய மாளிகையைக் காட்டி அதை உடனே சுருக்கி இல்லாமலாக்குகிறான். அதுவும் இந்திரப்பிரஸ்தம்தான். அப்படித்தான் இந்த பிரம்மாண்டம் அழியப்போகிறது இல்லையா?
அரசு