அன்புள்ள ஜெமோ
வெண்முரசின் அங்கதப்பகுதிகளை மட்டும் தனியாக எடுத்து வாசித்தேன். பீஷ்மர் ஒரு சூதனின் கேலியை சந்திக்கும் இடம் முதற்கனலில் வருகிறது. அதுதான் தொடக்கம். அங்கிருந்து பல இடங்கள். மொத்த மகாபாரதத்தையே கிண்டலடிக்கும் இடங்கள் வந்துகொன்டே இருக்கின்றன. ஆனால் இந்தக்கிண்டல் எங்குமே மகாபாரத ஒழுங்கைக் குலைக்கும்படி அமையவில்லை என்பதும் பகடியே கிளாஸிக்காகக்த்தான் இருக்கிறது என்பதும் ஆச்சரியமானது.
பகடி எப்போதுமே தத்துவார்த்தமானது. முகமூடி போட்டு வரும் கவிஞனைப்போல. வால் சரித்திரமாக ஆவதுதான் உச்சம்- வண்ணக்கடல் நாவலில். இந்த அங்கதம் வழியாக இன்னொரு மகாபாரதத்தை வாசிக்கலாம் என நினைக்கிறேன். ஒரு மாடர்ன் படைப்பாக இதை ஆக்குவது இந்த அம்சம்தான். பகடியை உள்ளே வைத்துவிட்டதனால் இதன் ரொமான்டிக்கான உச்சங்கள் சமப்படுத்தப்பட்டுவிடுகின்றன
சாரங்கன்