Wednesday, February 17, 2016

கர்ணன் எனும் மல்லன்

கிருஷ்ணன் பலராமரிடம் ஏதோ சொல்ல பின்னிருக்கையில் இருந்து அவர் கூச்சலிட்டபடி எழுந்து இருகைகளையும் தூக்கியபடி ஓடிவந்து பீமனின் கையில் இருந்த மரத்தைப் பற்றித் தடுத்து அதே விரைவில் திரும்பி ஜராசந்தனின் இடையில் உதைத்து அவனை பின்னால் சரியச்செய்தார். “போதும்!” என அவர் கூவ பீமன் கடும் சினத்துடன் மார்பில் ஓங்கி அறைந்து கூவியபடி கைகளை ஓங்கி முன்னால் சென்றான். பலராமர் எடையற்றவர் என காற்றில் எழுந்து பீமனை ஓங்கி அறைந்தார். கன்னத்தில் விழுந்த அந்த அடியின் விசையால் நிலைகுலைந்து பீமன் பின்னால் சரிந்து ஒரு மரப்பீடத்தை முறித்தபடி விழுந்தான். அதே விரைவில் திரும்பி எழமுயன்ற ஜராசந்தனை மீண்டும் மிதித்து ஒரு தூணை நோக்கி தெறிக்கச் செய்தார் பலராமர். தூண் உடைய அதன் மேலிருந்த பாவட்டா அவன் மேல் விழுந்தது.
இரு கைகளையும் விரித்து தலையை சற்றுத் தாழ்த்தி இருவரையும் ஒரே சமயம் எதிர்க்க சித்தமானவராக அசைவற்று நின்று மிகமெல்ல ஓர் உறுமலை பலராமர் எழுப்பினார். அந்த ஒலி இருவருக்குமே ஐயத்திற்கிடமற்ற செய்தியை சொன்னது. பீமன் தன் தோள்களைத் தளர்த்தி தலைதாழ்த்தி மெல்ல பின்வாங்கினான். ஜராசந்தன் எழுந்து கைநீட்டி ஏதோ சொல்ல முயல பலராமர் மீண்டும் உறுமினார். அவன் தனக்குப்பின்னால் நின்றவர்களை ஒருமுறை நோக்கிவிட்டு பின்னகர்ந்தான்.

~~~~~~~~~~~~
இன்றைய பதிப்பை படித்ததும் நேறாக இங்கு சென்றேன்.

இன்று கர்னன் சொல்வதில் ஒன்று உள்ளது

துரியோதனன் “ஆம் மூத்தவரே, நிகரற்ற வில்லவர் நீங்கள் என்று அறிந்திருந்தேன். பெரும் மற்போர்திறன் கொண்டவர் என்று இன்று அறிந்தேன்” என்றான். கர்ணன் “நான் பரசுராமரிடம் மட்டுமே மற்போரில் தோற்க முடியும். ஏனெனில் அது அவர் எனக்கு அருளியது” என்றபின் அவர்களின் தலையை வருடி “வருக!” என்றான்.

நாம் இதுவரை மழைபாடலில் வரும் பலாஹாஸ்வ முனிவர், பால்ஹிகர், பீஷ்மர், திருதாஷ்டிரர், பின் பலராமர் அதற்க்கு பின் இப்போது ஜராசந்தன், பீமன், துரியோதனன், நடுவே ஒரு இடத்தில் கீசகனுடய பெயர் கூட மல்லர்கர் பட்டியலில் வந்து விட்டது. அவர்களுக்கு என்றே தனி பெருமைகள். சதை மலைகள், கதாயுதத்தால் பெருமை இது போல. இவர்கள் பெயர் சொன்னால் நாம் கூட ஒரு முறை மூச்சை இழுத்து புஜ பராக்கிரமத்தை அவர்களாக பாவித்து பார்த்து கொள்ளகூடும். பரசுராமரை கூட கடைசி பட்சம் மழு ஏந்தி கொன்று தீர்த்தவர், தோள்வலிமை அவர்கனக்கிலும் உன்டு.

கர்னனையும் நாம் அப்படி பார்ப்பதில்லை. கர்னன் ஐவரும் ஒன்றான ஒருவன். இதை அவன் உருவாகும் தொடக்கத்திலேயே வந்து இருக்கிறது. அது இங்கு மற்றோறு முறை நினைவு படுத்த படுகிறது.
அவன் பல  கோனங்களில் மிக பெரியவன் தான். 

இதை நினைக்கும் போதே அந்த நாகம் வந்து நிற்கிறது!
~~~~~~~

மேலும் ஒன்று. அந்த திரெளபதி மனதன்னேர்ப்பு பதிவில் ஒரு சிறு இடம்
"துரியோதனன் சற்று அசைந்ததும் அவன் தொடையில் கை வைத்துத் தடுத்துவிட்டு சகுனி எழுந்து கையைத்தூக்கி மெல்லிய குரலில்"
நாம் இன்று ஜராசந்தனை போருக்கு அழைக்கும் துரியோதனன், அங்கும் பான்டவர்களை கண்டதும் அப்படி தான் இருந்திருக்கிறான். அவன் அண்னனும் தம்பியரும் தானே அங்கு இந்திரபிரஸ்தத்தில்.
போலவே இன்னொன்ரு ஜராசந்தன் மீது இன்னோரு கனக்கு உள்ளது. துரியோதனனின் குரு பலராமர் குலத்தோடு காட்டில் ஒளிந்த போது அவருடன் இருந்தவன் துரியோதனன். ஏகலைவன் கனை என்றால் ஏவியன் ஜராசந்தன். துரியோதனன் இளவரசான யுதிஷ்டிரனிடம் படைகள் கேட்டு, கெஞ்சி, தோற்ற இடம்.

ஜராசந்தன் படகு ஏறியபோதே நினைத்தேன்  துரியோதனன் அந்த ஜராசந்தனை 'தொப்பையை காட்டி நாலு குத்தாவது விட்டு தான் அனுப்பனும்'.

ஜராசந்தனை இரன்டாக கிழித்தால் தான் உன்டு, துரியோதனன் அன்னையின் பார்வை பட்டு காக்க படுபவன், ஆணால் எந்த கனம் எவர் எலும்பு முறியுமோ இருவரில் ஒருவர் இறந்தே போவாரோ என்று எண்ண வைத்த பதிவு! இது உன்மையில் கதை அல்ல... இன்று அந்த படகு இப்போது அங்கு நிறுத்தி இருக்கிறது.
உடனே போனால், உன்டாட்டில் கூட இடம் கிடைக்கலாம், நன்றாக சாப்பிட்டால் சேர்த்து கொள்வார்கள்.

நன்றி
வெ. ராகவ்