ஜெ
ஏக்கம் அல்ல.
ஆற்றாமை அல்ல.
வெறுப்பு அல்ல.
சினமும் அல்ல” என்றாள் முதுமகள். அவையனைத்தும் அடங்குபவை. ....
அடைந்தால் ( ஏக்கம் ) அறியப்பட்டால் ( ஆற்றாமை ) அன்பினால் ( வெறுப்பு ) அடைக்கலமானால் ( சினம் )....சரியான வார்த்தைகள்.
குரோதம்
கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கும் கோபத்தின் கொடிய முகம்.
காட்டின் தீ அணைந்தாலும் கங்கு ஊறி கிடக்கும். வஞ்சம் என்பது ஒரு சுடர்
போல் எரிந்து கொண்டு இருக்கும் - கோவிலின் அணையா விளக்கு போல. எதிபார்க்க
ஒரு நொடியில் எரி எண்ணையை விழுங்கி திரியை தின்று படர்ந்து நின்று
ஒளியின்றி காணமல் போகும் ( வென்றபின் தன்னையும் அழித்தபின்னரே
முழுமைகொள்வது )
அனைவரும் வளர்ந்து கொண்டு
இருக்கின்றனர். துரியன் , பீமன் அவைக்கு வருகையில் நெகிழ காத்து இருப்பதும்
அதுவே. அர்ஜுனன் சுபத்ராவிடம் உருகி அவளின் உரிமை தீ தன்னை சுடாமல்
இருப்பதுவும், பீமனால் கர்ணனின் கண்களை ஒரு கணம் பார்த்து குந்தி செய்தி
சொல்லுவதும், துரியன் பாஞ்சாலியை எல்லோர் மேலும் வைத்து நகை சூட
விழைவதும்.... அனைவரும் வளர்ந்து கொண்டு இருக்கின்றனர்.
ஆனால் கர்ணன் வஞ்சம் ஆழ்ந்து கிடக்கிறது
இரண்டு தடவை நீங்கள் "செம்பட்டாடை அசைவது " பற்றி சொன்னதாக நினைவு.
முதல்
தடவை அர்ஜுனனிடம் தோற்று தலை குனிந்து உறைந்து நிற்கையில் மாட மாளிகையின்
ஜன்னலில். வெய்யோன் பகுதியில் ஒரு முறை அவன் நடந்து வரும் திடுக்கிடலாக (
துழாவி கண்டு பிடிக்க முடியவில்லை ). மானசை கண் ஒரு முறை அவனை பார்த்து
கல்லாகி அமைந்து கொள்ள, உள்ளே மின்னியது இந்த ஆடையின் அசைவு.
இந்திரப்ரஸ்து அவையில் அந்த வஞ்சம் விழிக்கும். சூதாடி முடித்து ஜெயம் கொண்டபின் அவளின் ஆடையை உரிக்க சொல்லும் போது
வஞ்சம்
தன்னை முழுதும் வெளி காட்டி அவனை தின்று வாழ்ந்து கொள்ளும். பெண்ணின்
சிரிப்பு மட்டுமல்ல காற்றில் ஆடும் ஆடை கூட உள்ளே ஆழ பதிந்து கொல்ல கூடும் (
இப்படி தான் நான் அந்த வஞ்சத்தை எனக்கான வகையில் எடுத்து கொள்கிறேன் )
காத்து
இருக்கிறேன்... உயர்ந்து செல்லும் துரியன் தலை இடறி சிறுக்கும்
இடத்திற்காக. கர்ணனின் வஞ்சம் குமிழி போல ஒரு முறை வெளி வந்து தெரிவதற்காக
லிங்கராஜ்