ஜெ
நாகங்களின் கதைக்கு
இரண்டு அடுக்கு இருப்பதை இப்போதுதான் கவனித்தேன். நாகங்களைப்பற்றி வெண்முரசு சொல்லும்போது
அவை விழைவின் வடிவங்களாகச் சொல்லப்படுகின்றன. குறியீடுகளாக விளக்கப்படுகின்றன. நாகங்கள்
ஜனமேஜயனின் அனலில் விழுமிடம் அவ்வாறுதான் அர்த்தம் கொள்கிறது
ஆனால் நாகர்கள்
தங்கள் கதையைச் சொல்லும்போது அவர்கள் பாரதம் முழுக்க பரவியிருந்த ஒரு சாதியாகவும் அவர்கள்
தங்கள் உட்பூசல்களால் வலுவிழந்து பிறகு வந்த அரசர்களால் கொல்லப்பட்டவர்களாகவும் காட்டப்படுகிறார்கள்.
இந்த நுட்பமான டீடெய்ல் ஆச்சரியமளிக்கிறது
இந்த இரண்டு அர்த்தத்தளத்தைப்புரிந்துகொண்டால்தான்
ஆஸ்தினக்னுக்கும் வேள்வியில் எரியும் குறியீட்டு நாகங்களுக்கும் இடையே உள்ள உறவே புரியும்
என நினைக்கிறேன்
சாரங்கன்