ஜெ
வெண்முரசு வரிசையில்
வரும் நாகங்களில் கதைகல் இப்போதுதான் ஒரு முழுமையை அடைகின்றன. எத்தனை ஊடுசரடுகள். எல்லாவற்றையும்
பொறுமையாகத்தான் வாசித்துச்செல்லவேண்டியிருக்கிறது. நாகர்களின் குலவரிசையும் அவர்களின்
வட்டார இயல்புகளும் ஒரு இணையான இந்திய வரலாறுபோலவே விரிந்து வருவதைக் காணமுடிகிறது.
அவர்கல் இந்தியாவை
ஐந்தாகப்பிரித்து வைத்திருக்கிறார்கள். ஐந்து நாகங்களுக்கும் ஐந்து குணங்கள். குறிப்பாக
வேசரநாடு. அது ஆந்திரா. அங்கே துர்க்காதான் தெய்வமாக இருக்கிறாள். இன்றைக்கும் அது
கனகதுர்க்காவின் நாடுதான்
இம்மாதிரி பகுப்புகள்
வழியாக ஒரு வரலாறே நுணுக்கமாக உருவாகி வருகிறது. வெண்முரசு ஒரு பெரிய இந்திய வரலாற்றை
கட்டி எழுப்பிக்கொண்டிருக்கிறது. அதற்கு இதேபோல ஒரு நுணுக்கமான சின்ன வரலாறு இருப்பது
மிகுந்த ஆச்சரியம் அளிக்கிறது
இதேபோல அசுர வரலாறு
ஒன்று வந்தது. வண்ணக்கடலில். அதுவும் இந்தியவரலாறுதான் என நினைத்தபோது ஒரு பெரிய மன
எழுச்சி ஏற்பட்டது
எம் அருண்