Monday, August 1, 2016

யுகங்கள்



ஜெ

வெண்முரசின் நுட்பமான பகுதிகலில் ஒன்று சகுனியின் தாயம் சிதையில் எரியும் இடம். அந்த சிதைவாசனையை அவர் முகர்கிறார். அதை எலும்பு என்று முன்னால் எப்போதோ சொல்லியிருக்கிறீர்கள். தந்தத்தால் ஆனது. ஆனால் அது சகுனியின் எலும்பும் கூட. அந்தக்கதையை சகுனி கேட்பது கணிகரைச் சந்திக்கும் இடத்தில். அழகான இடம் அது. அந்த இடம் இப்படி வந்து முடிவுக்கு வருவது நிறைவு

பெரிய பாவங்களைச் செய்தவர்களின் மனம் இப்படி மாறுகிறது. குற்றவுணர்ச்சியால் அவர்கள் மேலும் மேலும் கடினமான மனிதர்களாக ஆகிறார்கள்.மேலும் பாவத்தில் ஒட்டிக்கொள்கிறார்கள். இது ஒழுக்க விஷயத்திலும் தெரிவதே. துரியன் சகுனி இரண்டுபேரிலும் இருக்கும் அந்த உறுதி அபாரமானது சகுனி துவாபரன். துரியன் கலி. இரு யுகங்கள். யுகபுருஷர்க்ளுக்குள்ள உறுதி அது

மகேஷ்