Wednesday, April 11, 2018

மைத்ரேயர்




ஜெ,

இமைக்கணத்தின் இப்பகுதியை தொடர்ச்சியாக வாசிக்கிறேன். கீதையிலிருந்து வெவ்வேறு திசைகளுக்குத் திறக்கும் வரிகள் இதில் நிறைந்திருக்கின்றன

விலங்கு நிலையிலிருந்து மானுடரை விடுதலை செய்தது என் முன்னோடிகளின் அறிவு. இருபாற்பிரிவு நோக்கிலிருந்து விடுதலை செய்வது என் அறிவு. நாளை எழும் அறிவோ இன்மையும் இருப்பும் ஒன்றென்று எழும் பேரறிவாகும். அதை கல்கி என்றும் மைத்ரேயர் என்றும் உரைப்பர் நூலோர்.

இந்த வரி பௌத்த ஞானத்தையும் உள்ளடக்கியதாக ஒரு விளக்கத்தை அளிக்கிறது. இந்த ஞானத்தால் என்ன பயன் என கர்ணன் கேட்டதற்கான ஆணித்தரமான பதிலாகவும் அமைகிறது. மைத்ரி மைத்ரேயர் என்றால் ஒற்றுமை, ஒருங்கிணைப்பவர் என்று அர்த்தம்

சந்திரசேகர்