Monday, April 16, 2018

லஹிமா தேவி





மதிப்பிற்குரிய ஐயா.

தாங்கள் செய்யும் அநீதிகளை நியாயப்படுத்த துரியோதனன் போன்றோர்
துணைக்கொள்ளும் நூலாக நீங்கள் காட்டுவது லகிமாதேவியின் விவாதசந்த்ரம்.
இன்றைய அத்தியாயத்தில் விதுரரின் பேச்சாக வந்த

நிஷாதர்களின் கொடும்மற்போர்களில் இதை கண்டிருக்கிறேன். மல்லன் எதிர்

மல்லனின் நெஞ்செலும்பை உடைத்து வெறும்கையால் குருதிக்குலையை
பிழுதெடுக்கையில் பெண்களின் கண்கள் அனல்கொண்டு மின்னும். அவர்கள்
காமத்தில் வெம்மைகொண்டு புளைவதைப்போல் தோன்றுவர்
என்ற வரியில் அது சொல்லப்பட்டுள்ளது. இது 16ஆம் நாள் குருக்ஷேத்திர யுத்தத்தில் துச்சாதனனின் நிலை கண்டு பாஞ்ஜாலியின் உவகையை அப்படியே காட்டுவதுபோல் எநக்கு தெரிந்தது.

இதைப்பற்றி விரிவாக தெரிந்துகொள்ள  கூகுளில் மேலோட்டமாக தேடினால் ஒன்றும்கிடைக்கவில்லை.எநவே லகிமாதேவி பற்றி அரிண்துகொள்ள ஏதாவது வலைதளமோ புத்தகமோ இருந்தால் அதை பரிந்துரைக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

அரவிந்த் ஆர்


அரவிந்த் ஆர்

அன்புள்ள அரவிந்த்

லகிமாதேவியின் விவாதசந்த்ரம் என்னும் ஸ்மிருதி இருந்துள்ளது என சில சுவடிகளில் குறிப்பு மட்டுமே உள்ளது. பிரம்மஞான சங்கத்தின் பிளவாட்ஸ்கி அதைப்பற்றிச் சொல்கிறார். அந்நூல் கிடைப்பதில்லை. அது விலங்கியல்பிலிருந்து நெறிகளை அடைந்தது எனப்படுகிறது. வெண்முரசில் எஞ்சியவை கற்பனைசெய்யப்பட்டுள்ளன

ஜெ