Friday, April 20, 2018

அறிதலின் பாதை




ஜெ

எங்கள் வேதாந்த வகுப்புகளில் திரும்பத்திரும்பச் சொல்லப்படுவது ஒன்றுண்டு. ஒன்றை நிராகரித்து அடுத்ததை அறிவது அறிவல்ல. அது வேதாந்தத்தின் பாதை அல்ல. ஒன்றை நாம் உணர்ந்து நாமாகி மேலே செல்வதே அறிவு. நாம் சாப்பாட்டை நிராகரித்துச்செல்வதில்லை. சாப்பிட்டு உடம்பாக ஆக்கி மேலே செல்கிறோம். கட்டக்கடைசியில் ஒரு பெரிய விருந்து உண்டு அதுவரை பட்டினியாகச் செல்வோம் என்று சொல்லக்கூடாது. அதைத்தான் அறிதலின் பாதை என்று விதுரருக்குக் கிருஷ்னன் சொல்கிறார். அந்தப்பகுதியே முக்கியமானது. அறிவு நம்மையறியாமல் நாம் ஆகவேண்டும். சாதகம் செய்யப்படாத அறிவு அறிவே அல்ல.அது எப்போதும் வேதாந்த யோக மரபிலே சொல்லப்படுவதுதான். இன்றைய அறிவு ஐயவாதம் சார்ந்தது. இன்றைக்குள்ள சூழலில் இதைத்திரும்பத்திரும்பச் சொல்லவேண்டியிருக்கிறது

வெங்கட்ராமன்