Sunday, April 22, 2018

சொல்லிப்பெருக்குதல்




ஜெ

ஏன் மரணவீடுகளில் மரணத்தைப்பற்றி அப்படிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று நான் ஆச்சரியப்பட்டதுண்டு “ஓர் இறப்பை எத்தனை முறை சொல்லிச் சொல்லி இறப்பு மட்டுமே என்றாக்கிக்கொள்கிறார்கள்!” என்ற வரி மிகப்பெரிய ஒரு திறப்பை ஏற்படுத்தியது. எல்லாவற்றையுமே இப்படி பலமுறை சொல்லிக்கொண்டால் அதன்மேல் நாம் ஏற்றிவைக்கும் அர்த்தங்கள் இல்லாமலாகி சின்னதாகிவிடுகிறது. மன அழுத்தம்கூட பேசப்பேச குறைந்துவிடுகிறது.

சொல்லிச்சொல்லி விரிவாக்கிக்கொள்ளலாம். சுருக்கியும் கொள்ளலாம். இரண்டு எல்லைகளிலும் அது இல்லாமலாகிவிடும். அதற்கு முன்னாடியே நிறுத்திவிடவேண்டும். அதைத்தான் நாம் பேசிக்கொள்ளமுடியும் என்கிறார் கிருஷ்ணன். அதைச் சொல்லிக்காட்டு என்கிறார்

மகேஷ்