Wednesday, April 25, 2018

இரண்டுவகை



ஏனென்றால் கதை மீண்டும் நிகழும் ன்று அந்தப்பெண்குழந்தை சொல்லுமிடத்தில் அதே உனர்ச்சியை நானும் அடைந்துகொண்டிருப்பதை உணர்ந்து ஆச்சரியமடைந்தேன். எல்லா கதையும் மீண்டும் நிகழ்கிறது. இந்த ரெக்கரிங் தான் மகாபாரதத்தின் தர்சனம் என நினைக்கிறேன். 

வியாசரின் கதை இரண்டுவகையிலே திரும்ப நிகழ்கிறது. ஒன்று  முற்பிறப்பு க்டன் தீர்வது. வியாசர் அவருடைய முற்பிறப்பில் கண்ணில்லாத ரிஷியாக இருந்தார். அதை அவர் ஈடுசெய்கிரார். இன்னொன்று தந்தை செய்வதன் தொடர்ச்சி. பராசரர் செய்வதன் ஈடுஆக இப்போது மக்கள் சாகக்கொடுக்கிறார். இரண்டு வகையான வினைகள் உள்ளன. ஒன்று முற்பிறப்பு அதாவது பிரார்த்தம்.. இன்னொன்று பிதுரார்ஜிதம்


ஸ்ரீனிவாசன்