Thursday, April 12, 2018

மழைப்பாடல்



பெருமதிப்பிற்கு உரிய எழுத்தாளர் திரு.ஜெயமோகன்  அவர்களுக்கு, 


கணேசலிங்கம் அனேக வணக்கங்களுடன் எழுதிக் கொண்ட மடல்.


முதற்கனலை அடுத்து, மகாபாரத்தின் இரண்டாம் பாகமான "மழைப்பாடல்" படித்து பேருவகை அடைந்தேன். அரசியர்களின் அனைத்து விதமான உணர்ச்சிப் பெருக்குகளையும்...விவரித்திருக்கும் விதமும், அரசர்கள்,இளவரசர்கள் மட்டுமின்றி,அமைச்சர்கள், அரசியர்தம் தோழிகள்,சேடிகள் மட்டுமன்றி,அன்றைய காலத்தில் இருந்த நிமித்திகர்கள்,சூதர்கள் மற்றும் வைத்தியர் போன்றவர்களின் ஆளுமை,திறமை,முறமை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது.
பாண்டு இறந்தபின் நடந்த நிகழ்வுகளைப் படித்தபோது கண்களில் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.


தங்களுடைய சொற் பிரயோகங்கள்,மற்றும் எழத்தாற்றல் கண்டு பிரமிப்படைகிறேன்.மனதிற்குப் பிடித்த காவியத்தை எழில்மிகுந்த தமிழில் படிப்பது மிகவும் மகிழ்வாகவும்,நெகிழ்வாகவும் உள்ளது. "வண்ணக்கடல்" வாசிக்க ஆரம்பிக்குமுன்... தங்களுக்கு என் பணிவான நன்றிகளையும்,வாழ்த்துக்களையும் தெரிவிப்பது கடமை என்று கருதுகிறேன்.

தங்களன்பு வாசகன்

செ.கணேசலிங்கம்