Saturday, April 21, 2018

முதற்கனல் வாசிப்பு



அன்புள்ள ஜெ


           நலமாக உள்ளீர்களா? இதற்குமுன் இரண்டு முறை தங்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்த முறையும் எழுதுவதற்கு ஏதோ ஒரு தயக்கம் அதையும் மீறி ஆர்வத்தில் எழுதிவிட்டேன். தற்போது தான் வெண்முரசில் முதற்கனலை வாசித்து முடித்தேன் சிறு வயதிலிருந்தே மகாபாரதக் கதையை பலமுறை கேட்டு வந்துள்ளேன்.ஒருவகையில் மாகாபாரதமும் ராமாயணமும் என்னை வடிவமைத்தவை என்று உறுதியாக சொல்லிவிடலாம். நேற்று மழைப்பாடலை வாங்கி வந்தேன் முதற்கனலை தொடர்ந்து அடுத்தடுத்த நாவல்களையும் வாசிக்கலாம் என ஆனால் கல்லூரித்தேர்வுகள் தொடங்கி விட்டன நாளொரு அத்யாயம் வாசிப்போம் என சமாதாணம் செய்துகொண்டேன். வாசிப்பை பெருக்க நாவலை மேலும் நுண்ணிய தளத்தில் புரிந்து கொள்ள விவாதித்தோலோ பகிர்தலோ தேவை என பலமுறை உங்கள் கட்டுரைகளில் படித்துள்ளேன். ஆனால் என் சூழலில் இலக்கியம் பற்றி பேசக்கூட ஆள் இல்லை. இயற்பியல் துறையென்பதால் சக நன்பர்களிடம் வாயே திறக்க முடியா நிலை. இதனை எப்படி கையாள்வது என தெரியவில்லை. சில சமயம் என் புரிதல் சரியா என்ற ஐயம் ஏற்படும் போது என்ன செய்வதென்றே தெரியா நிலை.உங்களின் ஆலோசனை வேண்டுகிறேன் நேரமிருந்தால் பதில் அனுப்பவும்.எழுத்துப்பிழைகள் இருந்தால் மன்னியுங்கள்.


தங்கராஜ்