Friday, April 13, 2018

அன்னையர்



அன்புள்ள  ஜெயமோகன் அவர்களுக்கு
             
வணக்கம் .இமைக்கணத்தில் அங்க நாட்டரசர் கர்ணன்பிதாமகர் பீஷ்மர் மற்றும் சிகண்டி தற்போது விதுரர்என மஹாபாரத கதை மாந்தர்கள் ,அணிவகுத்து தங்களின் வாழ்நெறி குறித்த ஐயங்களையும் ,குழப்பங்களையும்,இளைய யாதவரிடம் பகிர்ந்து கொள்ளும்  மானிடராக உசாவி செல்கின்றனர் . இந்த உரையாடல்களை படிக்கும்பொழுது இளைய யாதவர் குருஷேத்ர யுத்தத்தின் நடுவில் அர்ஜுனனுக்கு உபதேசிக்க போகும் , கீதை எனும் ஞானகிணற்றின் - இரண்டாவது ஊற்றுக்கண் என தோன்றுகிறது .ஆம் ஏற்கனவே அஸ்தினாபுரத்தில் துரியோதனன்  நடத்திய புருஷ மேத யாகத்தில் ஞான வேள்வியென வேத முடிபு கொள்கைகள் தான் வருங்கால உலகுக்குஉகந்தது என இளைய யாதவர் நிகழ்த்திய உரையை கீதையின் முதலாவது ஊற்றுக்கண் என கூறலாம் 

.இந்தபகுதிகளை குருதிசாரலிலும் ,இமைக்கணத்திலும் படிக்கும் போதே புறஉலக சிந்தனைகளை உதறி தள்ளிவிட்டுஅகவயமான சொல்லாடல்களில் மனம் திளைக்கவும்திகைக்கவும் ஒன்றி நிற்கிறது .பொய்யில்லை .நிஜம் தான் . இதனை உணரும்  கணம்  என் மனதில் எழுவது ஒரு ஒற்றை வினா தான் .கர்ணன் ,பீஷ்மர் மற்றும் சிகண்டி ஆகியஅனைவரும் தத்தம் அன்னையரின் வஞ்சம் /பெருவிளைவு /நிறைவேறா -சொல்லால் உலகுக்கு அறிவிக்காதவிருப்புகள் - ஆகிய ஏதேனும் ஒரு காரணங்களால் ஒற்றை சரடென இணைந்து நிற்க காண்கிறேன் . ஏன் எனஅறியேன்.இவர்கள் அனைவருமே  ,தங்களின் பிறப்பின் நோக்கம் அன்னையரின் சொல்காப்பதே என்ற  நெறிகளால் அலைகழிக்கப்பட்டு தங்களின் வாழ்வை அன்னையருக்கென படையல் என சமர்ப்பணம்செய்கிறார்கள் .

ஆம் பீஷ்மர் தனது அன்னை சத்யவதியின் சொல் கேட்டு ,மறுக்க முடியாத ஆணைகள் பெற்றுகாசி நாட்டு அரசியரை அம்பிகை ,அம்பாலிகை மற்றும் அம்பை ஆகியோரை நோய்கள் நிரம்பிய விசித்திரவீரியனுக்காக பெண் கேட்டு சுயம்வரத்தில் கலவரம்  நிகழ்த்திய போதே அவரின் வாழ்நாள்கட்டுகள் /தளைகள்/பாவ முடிச்சுகள் ஆரம்பம்

 வெண்முரசு – நூல் ஒன்று – ‘முதற்கனல் – 12 அந்த சுயம்வரத்தை நான் இதோதடை செய்திருக்கிறேன்இங்கே இனி நடைபெறப்போவது எண்வகை வதுவைகளில் ஒன்றான ராட்சசம்இங்கேவிதிகளெல்லாம் வலிமையின்படியே தீர்மானிக்கப்படுகின்றன பீஷ்மர் 

-  அதன் தொடர்ச்சி சால்வனை விரும்பியஅம்பை செய்த சபதம் - அம்பை குனிந்து சுழித்து மேலெழும் கங்கையின் நீரைக் கையில் அள்ளிக்கொண்டுஉரக்கச் சொன்னாள்

கங்கை மீது ஆணையாகச் சொல்கிறேன்.நான் சால்வனின் குழந்தைகளை மட்டுமேபெற்றெடுப்பேன்வேறு எக்குழந்தை என் வயிற்றில் பிறந்தாலும் இந்த கங்கை நீரில் அவற்றை மூழ்கடிப்பேன்.” -

ஆம் தனது அன்னை கங்கை மீது அம்பை உரைத்த சத்தியம் பீஷ்மரை நிலைகுலைய செய்தது .பின்புசால்வனாலும் ,பீஷ்மராலும் நிராகரிக்கப்பட்டாள் அம்பை .தங்களின் வடக்குமுகம் [நாடகம்] – 

காசி நாட்டுஇளவரசி இப்போதுதான் சென்றார்கள்ரதம் எங்கும் நிற்காது புண்பட்ட பன்றி போல சென்றது.அவர்களுடையரதம் ஒரு உப மண்டபத்தைத் தாண்டியபோது அங்கே தூங்கிக் கொண்டிருந்தஒரு பரதேசித்துறவி சொன்னது - தங்களுக்கு இறுதி நாள் குறிக்கப்பட்டு விட்டதாக.பேடி என்பவன் வாழ்க்கைக்கு ஒரு பார்வையாளன் மட்டுமே .  கடவுள்களும் பிசாசுக்களும் பேடிகள்.தன் ஆடிப் பிம்பத்தாலேயே ஒருவன் கொல்லப்பட முடியும் . அந்த ஆடிபிம்பம் சிகண்டி தான்.ஆம் அன்றய தினமே பீஷ்மர் தீராப்பழியுடன் தான் இனி வாழ்வு என்பதை உணர்ந்தார் .ஆம்மற்றொரு  மாந்தரான சிகண்டி அம்பையின் தீராக்காதல் மற்றும் வஞ்சம் இவற்றை உடல் தாங்கி வந்தவன்..ஆம்அன்னை அம்பையின் தீராக்காதல் அங்கத்தின் ஒருபாகம் எனவும்  அன்னையின் நஞ்சான வஞ்சம் அங்கத்தின்மறுபாகமென ஆணென்றும்  பெண்ணென்றும் ஆன ஆணிலியாக சிகண்டி உருவானான் .அதனால் காதல்மனைவி ,உற்றார் ,உறவினர் ,தத்தெடுத்த தந்தை துருபதன் ஆகிய அனைத்து உறவுகளையும் துறந்து பீஷ்மரைகொல்வதை மட்டும் வாழ்நாள் லட்சியமாக கொண்டான் . 

கர்ணன் வாழ்வில் நிகழ்ந்ததும் அதுவே .இங்கு தனதுஅன்னை குந்தி என்று அறியாவிட்டாலும் ,குந்தியை தாயென வழிபட்டவன் கர்ணன் .தன்னை சூதர் என உலகமேஇகழ்ந்த போதும் தன்னை ஆற்றில் தள்ளிவிட்ட தாயை அவன் குறைகூறியது இல்லை . வெண்முரசு – நூல்பதினாறு–‘குருதிச்சாரல்’–68 -

கணிகர் “அன்னைக்கும் கங்கைக்கும் நெறி வகுக்க எவருக்கும் உரிமையில்லைஎன்பதுண்டு என்றார்.ஆம் பீஷ்மர் ,சிகண்டி மற்றும் கர்ணன் ஆகிய அனைவரும் அன்னையின் நெறியை ஐயம்இன்றி ஏற்று அதனால் ஏற்பட்ட அவமானங்களையும் /இளிவரல்களையும்  நேர்கொண்டு நிற்க்கும் மாந்தராகவாழும் வாழ்வை ஊழ்கம் என நிகழ்த்தி காட்டுகிறார்கள் .ஆம் அவர்களின் வாழ்வை நோக்கும் சாதாரண /அற்பமானிடருக்கு தெரிவதெல்லாம் ஊழ் - விதி  என்றால் இளைய யாதவர் நோக்கும் பார்வை ஊழ்கம் - யோகம் .ஆம்ஜெயமோகன் அவர்களே இது போல அன்னையின் சொல்லுக்காக வாழ்ந்தவர்களில் முக்கியமானவர்கள்ஜராசந்தன் மற்றும் சிசு பாலன் .நல்ல வேளை அவர்கள் இறந்து விட்டனர் .இல்லையேல் விதுரருக்கு பின்புஇவர்கள் இருவருமே அணிவகுத்து நிற்பார்கள் .ஐயமில்லை .இத்தகைய வாழ்வு எதனால் என்பது செயலையோகமாக நிகழ்த்த உரை நிகழ்த்தும் இளைய யாதவர் மட்டுமே அறிவார் .
நன்றி ஜெயமோகன் அவர்களே
 தி .செந்தில் 
ஸ்ரீவில்லிபுத்தூர்