Thursday, April 19, 2018

ஆசிரியனின் ஆசிரியன்



எழுதுபவனின் உளச்சிக்கல் அது. அவன் தான் அமைக்காத உலகில் வாழும் திறனை இழந்துவிடுகிறான்



ஜெ

வெண்முரசிலே வந்த முக்கியமான வரி அது. எழுத்து இலக்கியம்பற்றி வெண்முரசிலே நிறைய வந்திருக்கிறது. காவியம் பற்றியும் செவ்வியல் பற்றியும்கூட நிறைய வந்துள்ளது. ஆனால் அதன் எழுதுபவன் மனநிலையைப்பற்றிய ஒரு அற்புதமான கமெண்ட் போகிற போக்கிலே வந்துசெல்கிறது

மிகப்பெரிய கதாபாத்திரங்களை உருவாக்கிய வியாசனிடம் சாத்தன் சொல்கிறான் பெரியோரை வியத்தலும் சிறியோரை இகழ்தலும் இலா நிலை தான் காவியம் என்று. எம்பெருமானார் வந்து அமர்ந்து அதை வியாசனிடம் சொன்னதுபோல் உணர்கிறேன்

ஆர். அனந்தராமன்