Wednesday, April 11, 2018

இமைக்கணம் பற்றி



அன்புள்ள உயர்திரு ஜெயமோகன்  அவர்களுக்கு ,

  "இமைக்கணம்"  பகுதி - 1 முதல் 8 வரை படித்து கொண்டிருக்குகிறேன் ...  சார், உங்களை ஒரே ஒரு முறை பார்க்க வேண்டும் . மிக்க நன்றி!!! .

வாழ்க்கையின் நோக்கங்களை மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். இதை விட உச்சத்தை "எப்பிடி பகவத் கீதை பகுதியில் அர்ஜுனன்க்கு சொல்ல போகிறீர்கள் ?"

"இமைக்கணத்திற்கு"  முந்திய கதைகளில் நடுவே நடுவே இதுபோல "தத்துவர்த்தங்கள்" வந்தன . ஆனால் "இமைக்கணம்" ஆரம்பம்  முதல் மிக வீரியத்துடன் இருக்கிறது. விடுமுறைக்கு பிறகு மிக உத்வேகத்துடன் உள்ளீர்கள் என தோன்றுகிறது...

என்னால் இன்னும் "1 முதல் 8" பகுதியின் சுவையை தாண்ட முடியவில்லை. 

 லூயிஸ் பிஸிச்சேர் எழுதிய "லைப் ஆப்  M K காந்தி " படித்தேன். அது முதல் நான் காந்தி அவர்களை பின்பற்ற முயற்சி செய்கிறேன்.
 "My experiments with truth" படிக்க இருந்தேன். எனக்கு எண்ணங்கள் மற்றும் வாழ்க்கையின் பிடிப்பு குறையும் போது அவருடைய "புக்ஸ்" படிப்பது ஊக்கம் கொடுக்கும்.

அதை "இமைக்கணம்" கொடுக்கிறது. அருமை, அருமை, அருமை.

உங்கள் உண்மையுள்ள,
வினோத் எஸ்