Monday, April 16, 2018

உடலின் அறிவு




ஜெ


சில வரிகள் அளிக்கும் அதிர்வு புரிந்துகொள்ளமுடியாததாக உள்ளது. உடலென ஆகும் அறிவுகொள்ளும் பொதுமையே அறிவென்பதுஎன்ற வரி. மரபான ஞானம் இது அல்ல. உடலென ஆகும் அறிவு அல்லது ஆத்மா தேகி. அது எப்படி தேகத்துடன் ஒட்டாமல் நிற்கமுடியும். நாய் நரி பூச்சி என பலவகையான உடல்கள் இங்கே உள்ளன. அவை அனைத்துக்கும் பொதுவான தன்னிலை உணர்ச்சி உண்டு. அதுதான் அறிவு. அதைத்தான் ஆலயவிஞ்ஞானம் என்று பௌத்தம் சொல்கிறது. துரியமென நம் யோகமரபு சொல்கிறது. இந்தவரியில் அறிவு என சொல்லப்படுவது அதைத்தானா?


ராஜ்