Friday, April 13, 2018

சிகண்டியின் கேள்வி




ஜெ

சிகண்டி தேடிவரும் கேள்வி சந்தேகமில்லாமல் செயல்புரிவது எப்படி என்பது. அதற்கான பதில் நீ செய்கிறாய், நீ முடிவுசெய்யமுடியும் என நினைக்காதே. அனைத்தையும் ஆற்றுவது பிரபஞ்ச சாரமான தெய்வம். அதன் கருவியே நீ. பிழையற்ற கருவியாக இரு என்பது. அது கீதாசாரம். அதைநோக்கிச் செல்ல எத்தனை கதைவிளையாட்டுக்கள். பீஷ்மரும் அம்பையும் சிவனும் தாட்சாயணியுமாக ஆடும் அந்த ஆடல் மிக அழகானது. அது எங்கே இருக்குமென எளிதில் ஊகிக்கலாம். சிகண்டியின் ஆழ்மன ஏக்கமல்லவா அது? அம்மா அப்பாவுடன் அவன் மகனாக இருக்கும் ஒர் அழகான் இளமைக்காலம் அது. அதிலிருந்து அவன் பீஷ்மரை கொல்லவிரும்பும் அன்னைக்குச் செல்கிறான். அவள் பெண் என்று எழுந்த தெய்வம். அந்த இடம் அந்த சிக்கலான கதையோட்டம் வழியாக வந்துசேர்வதை மனதுக்குள்அமைத்துத்தான் புரிந்துகொள்ளமுடிகிறது

ஜெய்சங்கர்