Sunday, April 22, 2018

விழைவனவும் அடைவனவும்



அன்புநிறை ஜெ,

முதற்கனலில் வியாசர் பீஷ்மரிடம் கூறுகிறார்:
ஞானம் என்பது அடைவதல்ல, ஒவ்வொன்றாய் இழந்தபின்பு எஞ்சுவது….பொறு நீ சேர்த்துக்கொண்டவை எல்லாம் உன்னைவிட்டு ஒழுகிமறையும் நாள் ஒன்று வரும். 

அறிஞர்கள் தங்கள் சொற்களால்தான் இறுதியில் வெல்லப்படுகிறார்கள். அதுவே அவர்களின் விடுதலை (சொல்வளர்காடு)

வியாசர் மொழிந்த இச்சொற்களில்தான் அவருக்கான விடுதலை என எண்ணுகிறேன்.

மிக்க அன்புடன்,
சுபா