Sunday, April 15, 2018

மெய்யான அறிதல்




ஜெ

இமைக்கணம் அறிதலைப்பற்றிப் பேசும்போது அறிவு இரண்டாக இருக்கமுடியாது என்பதைத்தான் ஆரம்பம் முதலே சொல்லிக்கொண்டு வருகிறதென நினைக்கிறேன். கர்ணனிடமும் பீஷ்மரிடமும் சிகண்டியிடமும் விதுரரிடமும் அதைத்தான் கண்ணன் சொல்கிறான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணத்தில் சொல்கிறான். சாமாயனிய அறிவும் விசேஷ அறிவும் ஒன்று என்கிறான். பீஷ்மரிடம் அறிவும் அதன் பயனும் ஒன்ரே என்கிறான். சிகண்டியிடம் அறிவும் ஐயத்துக்கு அப்பாற்பட்டது என்கிறான். விதுரரிடம் அறிவில் நன்மைதீமை என்னும் பிரிவு இல்லை என்கிறான். அறிதல் என்னும் நிகழ்ச்சியைப்பற்றிய நீண்ட தத்துவவிவாதமாக இவை உள்ளன. முதல்வாசிப்பில் நிகழ்ச்சிகளையே கூர்ந்துவாசித்தேன். தத்துவத்தை விட்டுவிட்டேன். பிறகு தத்துவங்களை நினைவில் எடுத்தபோது நிகழ்ச்சிகளை இணைத்துக்கொண்டேன். இப்போது தத்துவங்களைப்பற்றி யோசிக்கிறேன். அறிந்துகொள்கிறேன் என்கிரோம். அறிவை விவாதிக்கிறோம். ஆனால் உண்மையாக அறிகிரோமா என்பதை இமைக்கணம் நம்மிடம் கேட்கிறது

மகாதேவன்