Monday, February 1, 2016

ஊழ்



அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

இன்றைய வெண்முரசு அத்தியாயத்தை படித்து விட்டு தற்போது அருட்ச்செல்வபேரரசனின் மகாபாரத மொழி பெயர்பை திறந்து பார்த்தால் இன்றைய தலைப்புகௌரவர் எண்மரைக் கொன்ற பீமன் என்று இருக்கிறது. கடும் வெறுப்பு ஏற்படகடும் அன்பும் இருக்க வேண்டும் அல்லவா (காரணமற்ற வெறுப்பும் சிலர் மீதுஏற்பட முடியும் என்பதையும் அதற்கும் கூட உள்ளார்ந்த காரணம் இருக்கமுடியும் என்தையும் நான் ஏற்கிறேன்) அரக்கு மாளிகைக்கு பிறகும் கட்டிபிடித்து அழுத பின்னரும் பீமனிடம் அதே அன்பு கௌரவர்கள் மீது இருக்குமாஎன்ன? குண்டாசியும் சுஜாதனும் பீமனின் கையால் கொல்லப்படுவார்கள் எனநினைப்பதே மனத்தை கனக்கச் செய்கிறது

சிவக்குமார்

சென்னை