Thursday, February 4, 2016

முன்னூகங்கள்






சார் ,

திரௌபதி மனநிகழ்வில் இன்னொரு சந்தேகமும் வந்தது .
த்ரௌபதி எதை விரும்புபவள் (ரத்தம் ,போர் என... ) முன்னரே சொல்லி செல்கிறீர்கள் , அவள் குளிக்கும் நீரின் நிறம் என ... (  செங்காந்தள் பூ போருக்கானது என லோகமாதேவி சொன்னார்கள் )...

1.
காவியங்களின் இயல்பு இவ்வாறு முன்பே குறிப்புணர்த்தும் என கொள்வதா ? , கொற்றவையிலும் இவ்வாறுதான் கண்ணகி பிறக்கும்போதே  தேவியாக வருவாள்  .

நேற்று காலமின்மையின் கரையில் பதிவில் அம்மாவின் ஜாதகம் அப்படி , அவ்வாறுதான் நடக்கும் எனும் வரி ஞாபகம் வருகிறது ... ( சார் அந்த கட்டுரை படித்து ஒருமாதிரி எமோஷன் ஆகிவிட்டேன் அப்போது .... )

எல்லாமே முன்னரே திட்டமிட்டு நடக்கும் நாடகங்களோ என என்ன தோன்றுகிறது .

ஒருவரது ஆதாரகுணம் பிறப்பிலேயே உருவாகிவிடுவதாக நீங்கள் சொல்வதாக எடுத்து கொள்கிறேன் ( த்ரௌபதியின் கையிலிருக்கும் சங்குமுத்திரை ) .

சூழலால் அனுபவத்தால் ஒருவர் குணம் மாறும் . அல்லது வரலாறு என்பது சூழல் முயங்கி உருவாகும் ஒன்று என்பது சரியற்றதோ எனவும் வென்முரசு படிக்கும் போது தோன்றுகிறது .

நேற்று எதேச்சையாக பத்மவியூகம் கதையை வாசித்தேன் . இதன் அர்த்தத்தைத்தான் மொத்த காவியமும் சொல்கிறதோ என உணர்கிறேன் .
ஆளுக்கு ஒரு பத்மவியூகத்தில் இருக்கிறோம் , ஒவ்வொரு புழுவும் பூச்சியும் கூட
ராதாகிருஷ்ணன்

அன்புள்ள ராதா

காவியங்கள் மட்டுமல்ல, வாழ்க்கையேகூட நிகழ்ந்து முடிந்தபின் பார்த்தால் அது இயல்பான ஒரு முடிவைநோக்கிச் செல்வதைக் காணலாம். அம்முடிவுக்கான குறிப்பு இருந்துகொண்டே இருப்பதையும் காணலாம்

ஜெ