Monday, February 1, 2016

தீமையின் மொழி



அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வெண்முரசு முழுவதுமே பல்வேறு கதாபாத்திரங்கள் பல்வேறு இடங்களில் தங்கள்உடல் மொழியை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் கணிகரின் உடல் மொழியானதுமிகவும் தனித்துவம் வாய்ந்தது. அவர் பேச்சைக்காட்டிலும் அதிகமாக தன்உடலாலே பேசுகிறார். மூக்கை உறிஞ்சுவது உட்பட... இது தனித்துவம் மிக்கது.

சிலரின் அருகில் இருக்கும் போது நம் சக்தியை உறிஞ்சுவது போல் உணர்வோம்...சிலரை நோக்கும் போதே அருவெருப் பெய்துவோம்.... கிருஷ்ணரைப் போன்ற ஒருவர்இருந்தாலும் கூட அவரின் இருப்பை மறைக்கக்கூடியது இத்தகையோர் இருப்பு....

சிவக்குமார்

சென்னை