Friday, February 26, 2016

கொலையை கலையாக்குத்ல்






ஜெ

அங்கதநாடகத்தில் சூத்ரதாரன் போகிறபோக்கில் ஒன்றைச் சொல்கிறான். எதையும் மொழியாக ஆக்கிக்கொண்டால் சாதாரணமாக ஆகிவிடும். அதையே நாடகத்திலும் செய்கிறார்கள். அவர்கள் பேசிக்கொண்டிருப்பது ஒரு பெரிய மானுட அழிவை. அதை நாடக அழகியலாக ஆக்கிக்கொள்கிறார்கள். துணியாலான நாகங்கள் வந்து வந்து வெட்டுபட்டு செத்துவிழுவதென்பது ஒரு கலைநிகழ்ச்சி. துய்ரம் அல்ல. இதைத்தான் கலைவழியாகச் சாதிக்க நினைக்கிறார்கள். அமெரிக்காவின் பெருநகரங்கள் எல்லாமே செவ்விந்தியர்களை அழித்து உருவானவை. அங்கேஅவர்களின் கலாச்சராம் சம்பந்தமான மியூசியங்கள் இருக்கும். அந்த மியூசியங்கள் அவர்கள் இயல்பாக பழங்காலமாக ஆகிப்போன மக்கள் என்னும் எண்ணத்தை உருவாக்கிவிடுகின்றன. மிகப்பெரிய உத்தி

ஜெயராஜ்