Wednesday, February 17, 2016

வஞ்சம்





அத்துடன் தங்களுக்கு முன்வரிசையில் அரசபீடமொன்றை பேரரசியே சித்தமாக்கியிருக்கிறார்…” என்றார்.
விதுரரிடம் சொல்லுங்கள், இப்படி ஒரு மறுப்பைச் சொல்லும் தருணத்தை அங்கநாட்டான் துளித்துளியாக சுவைக்கிறான் என்று.”

கர்ணன் திகைத்து திரும்பிகுருநாதரே, அது நிகழலாகாதுஎன்றான். “ஏன்?” என்றார் துரோணர். கர்ணன் தலைகுனிந்துஎவர் மேலும் தீச்சொல்லாக நான் மாற விரும்பவில்லைஎன்றான். 

ஏறக்குறைய எல்லாத் தருணங்களையும் இதே விதமாய் எதிர்கொள்ளும் கர்ணனின் இந்த மறுமொழி அவனுடைய இயல்புக்கு மாறாகத் தோன்றினாலும் ஒரு organic development தான்.
அன்பை அன்பால்தான் நிகர் செய்ய வேண்டுமேயொழிய வேறெதாலோ அல்ல. முக்கியமாக கருணையாலல்ல. கருணை காட்டுவது ஒரு அவமதிப்பும் கூட.

மங்கை