Tuesday, February 23, 2016

வெல்லும் இடங்கள்



ஒரு பத்து நாள்களாக வெவ்வேறு காரணங்களால் (வேலை, பயனம்), வெய்யோனைத் தொடர முடியாது போனது. மீண்டும் துவங்கி விடுபட்டதிலிருந்து ஒவ்வொரு  அத்தியாயமாக வாசிக்கிறேன். இதுவும் நல்லதுதான். ஒன்றுடன் ஒன்றாக பொருத்தி வாசிப்பது எளிதாக இருக்கிறது. (பொதுவாக இரண்டாம் வாசிப்பில் நாவல் முடிந்த பின் வாசிக்கும் போது அது கைகூடும்)

//விதுரரிடம் சொல்லுங்கள், இப்படி ஒரு மறுப்பைச் சொல்லும் தருணத்தை அங்கநாட்டான் துளித்துளியாக சுவைக்கிறான் என்று.” கனகர் “ஆணை” என தலைவணங்கினார்.//  ஒவ்வொன்றாய் கடந்து வந்து கர்ணனுக்கு முறைமையின் பெயரால் இழைக்கப்படும் அவமானங்களைக் கண்டு துயரம் ததும்பி மனம் சுருங்கும் போது. தருக்கித் தலை நிமிர்ந்து தானென்று நின்றான் கர்ணன். என்னவொரு உயர்வ அது. எளிய மானுடன் நான், உன் பேருருவிற்கு முன் மிக மிகச் சிறியவன் எனச்சொல்லிக்கொண்டேன் ஒருமுறை கர்ணனை நோக்கி.

அதேபோல ஜராசந்தன் கவச குண்டலங்களைக் காணும் அத்தியாயம். ஒரளவிற்கு வாசிக்கும் போதே தெரிந்து போனது அதுதான் நடக்கப் போகிறது என. எனக்கு நானே கட்டுபாட விதித்துக்கொண்டேன் இன்று பொங்கக் கூடாது என்று. பல முறை கண்ட காட்சி தான் என்று சொல்லிக்கொண்டேன். ஆனால், விடியலின் வருணனையிலேயே எல்லாம் தவிடு பொடி. மெல்ல உதிக்கிறது உலகு. ஒளி கொள்கிறது. வில் வளைவென சிரம் உயர்த்துகிறான் வெய்யோன். அதோ அந்த கர்ணன். காவசமும், குணடலும். புல்லரித்து விட்டதே. அன்றும் அது புதிய காட்சி தான். புதிய இடம், புதிய சூழல்.இந்த ஆர்பாட்டாங்கள் எதுவும் ஒரு துளியும் தீண்டாத உயரத்தில் கர்ண மாமன்னன். பின் என்ன செய்ய, "வாழ்ந்து போதும் நீரே" என ஆசானை வாழ்த்தி விட்டு அமைதி கொள்ள வேண்டியதுதான்.

எளிய மனிதர்களின் பெரிய கண்களுக்கு காடசியாகும் பேரொளி, எப்போதும் அதிகாரத்தின் சிறிய கண்களுக்கு புலனாகப் போவதில்லை. அவர்கள் அதற்கு முறைமை என்னும் கரியதிரைக்குப்பின் நின்று கொள்கிறார்கள்.
சில அத்தியாயங்கள் , உங்களை ஓடி அடைந்துவிடுவேன் நாளை.
நன்றி,
சுந்தரவடிவேலன்.