Wednesday, February 10, 2016

நாவல்



பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

இந்த நாகலந்தீவின் வேர்ப்படலம் நாங்கள்” என்றாள் முதுமகள். கர்ணன் “பாரதவர்ஷத்தை சொல்கிறீர்களா?” என்றான். கையசைத்து “அது உங்கள் சொல் இந்நிலத்தின் பெயர் நாகலந்தீவு. என்றும் அவ்வாறே அது இருக்கும்” என்றாள்."

ஒரு சின்ன சந்தேகம்  ஜம்பூத்வீபம் -நாவலந்தீவு என்றுதானே வழக்கமாக நமது 'பாரதவர்ஷம்' அழைக்கப்படுகிறது,நீங்கள்  நாகலந்தீவு என்று சொல்லுகிறீர்களே இரண்டும் ஒன்றுதானே?
அன்புடன்,

அ .சேஷகிரி.

அன்புள்ள சேஷகிரி

நாகர்களிடமிருப்பது முற்றிலும் வேறு தொன்மம். நாவல்- ஜம்பு மரம் இவர்களின் மரம். அவரக்ள் பிலக்‌ஷமரத்தை அத்திமரத்தை முக்கியமாக நினைக்கிறார்கள். அதுவே பின்னர் ஆலமரமாகியது, அவர்களின் பிரபஞ்சம், அவர்களின் இந்தியாவே வேறு

ஜெ