Wednesday, February 24, 2016

சாக்கியார்கூத்து

ஜெ

அரசர்கள் முன்னாலேயே அரசர்களை இப்படி கிண்டலடிக்கும் வழக்கம் பழைய காலத்தில் இருந்ததா? ஆச்சரியமாக இருக்கிறது

சித்ரா







அன்புள்ள சித்ரா

அங்கதம் என்னும் சுவை அன்றைய காவியத்தில், நாடகத்தில் மிக முக்கியமான ஒன்றாக இருந்திருக்கிறது. பிரகசனம் என்பது அதற்கான வடிவம்

கேரளத்தின் பிரகசன கலைவடிவம் சாக்கியார்கூத்து. இந்த அங்கதநாடகத்தில் சாக்கியார் கூத்தின் பல வகைகள் உள்ளன . சாக்கையர் கூத்து சிலப்பதிகாரத்திலேயே குறிப்பிடப்படுகிறது

சாக்கியார் ஒரு அங்கதக்கலை நிபுணர். அவர் எந்த எல்லைக்கும் சென்று எவரையும் கிண்டல் செய்யலாம். தெய்வங்களை இழித்துரைக்கலாம். அது அனுமதிக்கப்பட்டது. அரசன் அவரை தன்டிக்க முடியாது. அவர் மனசாட்சியின் குரலாகவே இருந்தார்

ஆகவே இம்மரபு அன்றும் இருந்தது என ஊகித்தேன்

ஜெ