Saturday, February 27, 2016

அழியாவரலாறு

 
 
ஜெ
காண்டவ அழிவை வெறும் அங்கதம் வழியாகவே கடந்துசென்றுவிடுவீர்களோ என்று அஞ்சினேன். ஏனென்றால் அது ஒரு பெரிய அநீதி. காண்டவத்தின் அழிவு மகாபாரதத்தின் கதைமாந்தர்களை கடைசிவரை விடவும் இல்லை. அவ்வளவு பெரிய நிகழ்ச்சியை மகாபாரதம் எளிய புராணம் வழியாகக் கடந்துசெல்கிறது. நீங்கள் அதை ஆரம்பம் முதலே ஒரு சமானமான சரித்திரமாக கொண்டுவருகிறீர்கள். ஆகவே அதை முழுமையாகச் சொல்லித்தான் ஆகவேண்டும். காளிகர் வந்து அக்கதையை விரிவாக உள்ளதுபோல சொல்ல ஆரம்பித்தபோதுதான் நிம்மதி. அது காவியத்துக்குச் சரியாக இருக்கலாம். ஆனால் நீதி என ஒன்று இருக்கத்தானே செய்கிறது. அதை விட்டுவிடக்கூடாது அல்லவா?
சண்முகம்