அன்புள்ள ஜெ
அருவிக்குமேலே நின்றுபார்க்கும்போது
ஆறு குவிந்து வேகமாகப்போவதைப்பார்க்கும்போது ஏற்படும் ஒருவகையான திகைப்பை வெய்யோன்
கொடுக்கிறது. குண்டாசி வரும் காட்சி அதை அடிக்கோடிடுகிறது. மாபெரும் ரத்தக்களம் ஒன்று
நிகழப்போகிறது என்பதை அவனுடைய உள்ளுணர்வு சொல்கிறது. பெரும்பாலான பேரழிவுகளுக்கு அப்படி
தன்னை முன்னறிவிக்கும் இயல்புண்டு என்று ஓஷோ ஓரிடத்திலே சொல்கிறார். அதுதான் அந்த உள்ளுணர்வல்
அவன் சொல்வது.
ஆனால் அதை நாம் ஏற்றுக்கொள்வதில்லை.
ஏனென்றால் நாம் ஒவ்வொருவருக்கும் நமக்குரிய சொந்த நியாயங்களும் விளக்கங்களும் இருக்கின்றன.
நாம் அவற்றைத்தான் எப்போதும் நம்புவோம்
சங்கர்