Wednesday, February 3, 2016

சாளரம்




பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,

வெண்முரசு -44 ல் ," வடக்குக்கோட்டத்தின் மேற்குப்பகுதி சாளரங்கள் அனைத்தும் திறந்துகிடந்தன. ஒற்றைச்சாளரத்தில் இளஞ்செந்நிறத்தில் ஆடையசைவு ஒன்று தெரிய, அவன் உள்ளம் அதிர்ந்தது. "  என்று வருகிறது. இது முன்பு காம்பில்ய போரின் தோல்விக்கு பின் திரௌபதியை மாடத்தில் காணும் கர்ணன் அடைந்த உளவலி.
உண்மையில் அதன் பிறகு கர்ணனை திரௌபதியோடு இணைத்து எந்த அத்யாயம் வந்தாலும் என் மனதில் அந்த செந்நிற ஆடை அசைவு ஒரு காட்சியாகவே வந்து போகும். இன்று இந்த அத்தியாத்தில் அவன் தேரிலிருந்து மாடங்களை பார்த்துகொண்டு வரும்போதே என் மனதில் அந்த காட்சி வந்துவிட்டது, அந்த வலியும். இது உங்கள் எழுத்தின் மாயம். (அதேபோல் சகுனியோடு இந்திரபிரஸ்தம் குறித்து பேசிவிட்டு சிவதரோடு தேரில் வரும்போது கர்ணன் அடிகடி தன் தொடையை தட்டிக்கொண்டே பேசுகிறான் என்பதயும் ஒரு குறுகுறுப்போடு உணர்ந்தேன்).

எதனை அனுபவங்கள் உங்கள் மூலம்.

நன்றி
கருணாகரன்.