Tuesday, February 2, 2016

கலியா?






ஜெ

மெல்லமெல்ல கதை எங்கே செல்கிறது என்று புரிகிறது. நேற்று மிகமென்மையான எச்சரிக்கையாக கணிகர் சொன்னதைத்தான் குண்டாசி இன்றைக்குச் சொல்கிறான். இந்த கிளாஸிக் கதைகள் எல்லாவற்றிலுமே இந்த அம்சம் உள்ளது. அவர்களுக்கு உள்ளூர எல்லாமே தெரிந்திருக்கும். பிறப்பிலேயே பல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கும். கிரேக்கக் கதைகளிலும் இப்படித்தான். அனைத்தும் நேரக அதை நோக்கியே செல்லும். அவர்களுக்குத்தெரியும். ஆனால் ஒன்றும் செய்யமுடியாது. சென்று குப்புறவிழவேண்டியது அவர்களின் விதி

அந்த மண்ணுக்குள் கிடக்கும் புருஷன் கலிதேவன் என நினைக்கிறேன். அவனுடைய கதைதான் கிடைத்தது. சரியா?

அருண்