http://www.jeyamohan.in/78979
ஜெயமோகன் அவர்களுக்கு
இன்றய
பதிவு ஒவ்வொரு வென்முரசு புத்தகத்தில் வரும் உச்ச பட்ச பதிவில் ஒன்று.
தொடர்ந்து படிப்பதால் இப்படி என்னமா என்று தெரியவில்லை ஒரு உச்சத்தை
அடுத்து வருவது தாண்டி தாவி செல்கிறது.
அப்பா இந்த பதிவு என்ன அர்ஜுனனையே சொல்லி முடித்ததை போல.
ஒரு கணம், அதனால் அல்லவா வில் ஏந்தியவர் எல்லாம் எதிர்க்க முடியாமல் வீழ்ந்தார்கள்.
விழுபவர்களை எல்லாம் நண்பர்கள் அல்லாது பற்றுபவர்கள் யார்.
தழுவி மல்யுத்தம் செய்வதை அண்ணனிடம் அறிந்தானோ. அங்கும் ஒரே கணம்.
கண்களின்
ஒளியினால் அடைந்த வெப்பம், இது என்ன அக்பர் பீர்பல் கதையின், அரண்மனை
விளக்கின் வெம்மையில் இரவை யமுனை கழுத்தளவு பாய கடந்ததாய் இருக்கின்றது.
பளிங்கில் ஒற்றை கொன்றை - ரொம்ப காலம் நினைவை இது தப்பாது
தன்னுள் தடைகளே இல்லாது ஒளியின் உலகிலும் விழைவே உருவாக செல்கிறான்.
இந்த அத்தியாயத்தில் எத்தனை உவமை.
நாக உடல்கள், ஒற்றை இலக்கு.. ஒரே ஒருவன் சென்றடையும் இலக்கு.
தாமரை இதழ்கள் மலர அம்பென செல்பவனை உள்வாங்கும் இலக்கு.
'அதை அணுகி “இங்குளேன்” என்றான்' ' - இந்த வரி என்ன அழகான உவமை
இன்று பொழுது போகும் இடம் எல்லாம் இந்த ஏழு உலக நாகங்கள் தான்...
மிதித்து
ஏறி செல்பவை, எத்தனை சேர்ந்து சுற்றி சுற்றி தள்ளுபவை, எத்தனை பின்னி
பிணைந்து நுல் இடை விடாதவை, எத்தனையை நெருப்பு கண்களுடன், எத்தனை பொன்
உடலோடு, வெள்ளை பெரிய உடல்லோடு.. என்றேனும் சில ஒளியான உடலோடு
அர்ஜுனனின் வைர விழிகள் - அதை கேட்க ஒரு கணம் தயக்கமாக இருக்கிறது.
நன்றி
வெ. ராகவ்