ஜெ
இந்திரநீலம் நாவலில் துவராகையின் நகர அமைப்பு எப்படிப்பட்டது என்பதை நான் தங்களிடம் மின்னஞ்சலில் பேசும்போது சொன்னீர்கள். நான் அந்நகரின் அமைப்பைப்பற்றிய வர்ணனைகளை பழிஅய இலக்கியங்களில் எங்கும் காணவில்லை. ஆகவேதான் கேட்டேன். நீங்கள் அளிக்கும் சித்திரம் எத்தகையது என்பதை கண்டேன். நீங்கள் அந்நகரம் மேருவின் அமைப்பில் உள்ளது என்றீர்கள். அப்படியென்றால் இரட்டை மேரு. ஒரு மேருவின் உச்சியில் கண்ணன். இன்னொன்றில் அந்த வாயில். அந்த வாயில் இருக்கும் மேருவை ஸ்ரீ என்றும் நகரம் இருக்கும் மேருவை நாராயணம் என்றும் சொல்லலாம் இல்லையா? நான் அதைப்பற்றி மேலும் விசாரித்தேன். ஸ்ரீசக்கரத்தின் முப்பரிமாண வடிவமே மேரு. ஆனால் வைணவர்கள் இங்கே அதை அதிகமாகப்பூசை செய்வதில்லை. அவர்களின் மார்க்கம் பிரபத்தி என்று ஏற்கனவே உடையவரால் வகுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தாந்த்ரீக முறைகள் தடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை இந்தியா முழுக்க செல்வாக்குடன் தான் இருந்து வருகின்றன
சாரங்கன்