Thursday, September 10, 2015

வில்



காண்டவ வனத்தை நெருப்பு உண்டு செரிக்க
கண்ணனிடமும் அர்ஜுனனிடமும் வந்து கோரும்போது தான் 
காண்டீவம் அர்ஜுனனுக்கு அருளபடுவதாக படித்துள்ளேன்.

காண்டீவமும் அர்ஜுனனும் ஒன்று என்று சொல்லத்தக்க வகையில் அது அவன் உறுப்பாகிறது.

இந்திரனின் ஆணையின் பெயரில் வரும் மழையோடு பார்த்தனின் அம்புகள் போரிட்டு
அகினி காண்டவத்தை உண்டு செரிக்க உதவதில் இருந்து பாரதத்தில் காண்டீபம் பற்றி படித்த நியாபகம்.
அப்படியானால் அது அர்ஜுனனின் வஜ்ராயுதாமோ?

காண்டீபத்துகென ஒரு கதை உண்டு, அது அக்கினியின் பொறுப்பில் வருகிறது, 
அக்கினி பார்த்தனுக்கு அருளி, பின் பாரதம் முடியும் போது அக்கினியிடமே திரும்புகிறது.
திரும்பும் முன் ஒரு சுவையான கதையும் உண்டு. 
எந்த காண்டீபத்தை அவமதித்தால், அவமதித்தவரை கொலை அல்லது கொல்லும் பொருட்டு தன் சாவு என்று உறுதியுடன் இருந்த அர்ஜுனன் அதை திருப்பி தருகிறான்.

தலைப்பை கேட்டதும் நன்றாக தான் உள்ளது.

ஆணால்... :)
காண்டீபத்தை காண்டவத்தில் தான் எதிர்பார்த்தேன். 
ஏனோ காண்டவமே தொடங்கும் என்றும் எதிர்பார்த்தேன்.

ஒருவேளை காண்டீபம் காண்டவத்தின் வேறு உருவமோ?

எப்படி இருந்தாலும் இனி அர்ஜுனனை முழுமையாக ரசிக்கலாம்.

நன்றி
வெ. ராகவ்