Monday, September 21, 2015

சித்ரரதன் செய்த தவறென்ன?





 சித்ரரதன் கேட்கும் கேள்வி சரியானதுதானே. சிற்றுயிர்கட்கெல்லாம் பாதுகாப்பாக இருக்கும்படி கவனமாக தேரை ஓட்ட முடியுமா? சித்ரரதன் தண்டிக்கப்பட்டது சரியா?இதைப்போன்ற கேள்விகள் இந்து மத இலக்கியங்களில் மீண்டும் மீண்டும்கேட்கப்படுகின்றன. சூர்ப்பணகையை அவமானப்படுத்திய இராம இலட்சுமணர்கள் செய்கைதவறில்லையா? குரங்குகள் குலத்தில் பிறர் மனைவியை அபகரித்துக்கொள்ளுதல்
தவறில்லை என இருக்கையில் வாலியை இராமன் கொன்றது சரியாகுமா? விபீஷணன் தன்அண்ணனை விட்டு வந்து இராமனை சரணடைந்தது சரியா? மகாபாரதத்தில் தருமன்ஒத்துக்கொண்டு ஆடிய சூதாட்டத்தில் அவன் அனைத்தையும் இழந்தது எப்படிதுரியோதனனின் குற்றமாகும்பீஷ்மரை சாய்க்க மற்றும்  துரோணரைக் கொல்லபயன்படுத்திய வழிமுறைகள் சரியா?
 

 வெண்முரசில் கண்ணன்   சததன்வா நாட்டு வீரர்களை கொன்றது சரியா? கிருதவர்மனைதண்டித்த திருஷ்டத்துய்மன், சாத்யகியை தண்டிக்காமல் இருப்பதை கண்ணன் எப்படிஏற்றுக்கொள்கிறான்இவையெல்லாம் அறம் சார்ந்தவையாஅல்லது  அற மீறல்களா?

   அறம் காலத்திற்கு காலம், இடத்திற்கு இடம்ஆளுக்கு ஆள் மாறும் ஒன்றா?
அறத்தை ஆளாளுக்கு எதாவது தர்க்கத்தை சொல்லி தன் சார்பாக
விளக்கிக்கொள்ளமுடியும் அளவுக்கு அறம் பலவீனமானதா? அல்லது அறத்தை சரியாக நாம்புரிந்துகொள்ளாததால் வரும் வெற்று வினாக்களா மேற்சொன்னவைவெண்முரசு தன்தலையாய நோக்கமாக கொண்டிருப்பது அறம் சம்பந்தப்பட்ட இதைப்போன்ற சிக்கல்களைநமக்கு தெரியவைத்து, தெளியவைப்பதுதான் என நான் நினைக்கிறேன்.

 நான் சித்ரரதனின் கேள்வியை  சிந்தித்து பார்க்கிறேன்.ஒவ்வொரு உலகிற்கேற்ப இயற்கைசூழல்  ஏற்பட்டு  இருக்கும். அந்த உலகத்தின் உயிரினங்களின் தகவமைப்பு,பாதுகாப்பு உணர்வுகள் அதற்கேற்ப உருவாகியிருக்கும். அந்த இயல்புக்கு மாறாக ஒருவர் நடக்கும்போது அதற்கான முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அந்த உலக
அறமாகும். ஆக அங்கிருக்கும் உயிரினங்கள் எதிர்பார்க்காத ஒரு விபத்து உருவாக ஒருவன் தெரிந்தோ தெரியாமலோ காரணமாக இருப்பது அறமீறல் என்றே கருதப்படும்.

சித்ரரதன் வாழும் இடம் கந்தர்வலோகம். அங்கு இருப்பவர்கள் நுண்மையான புலனறிவுகொண்டவர்களாக இருக்கவேண்டும். பாதையில் விழுந்திருக்கும் மலர் அவனுக்குஎச்சரிக்கை உணர்வை கொடுத்திருக்கவேண்டும். அது ஒடிந்து விழுந்திருப்பது அவனுக்கு தெரிந்திருக்க வேண்டும். அதனால் அந்த மலருக்குள் ஏதோ உயிரினம்இருக்கலாம் என ஐயுற்று எச்சரிக்கை அடைந்திருக்க வேண்டும்கந்தவர்களுக்கானநுண்ணறிவோடு அவன்  செயல் படாததால் அந்த விபத்து நடந்துவிடுகிறது. அதுமட்டுமல்லாமல் அந்த தவறை தவறென அறியாதவனாகவும் அவன்  இருக்கிறான். ஆகவே அவன்
தண்டிக்கப்படுகிறான் எனக் கருதுகிறேன்.

தண்டபாணி துரைவேல்