Tuesday, September 8, 2015

கண்ணீர்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,


இந்திரநீலம் படிக்கும் போதே எழுத வேண்டும் என்று தோன்றியது, வெண்முரசு நாள் ஆக ஆக உள்ளே இழுத்து செல்கின்றது. பாடல்கள் கேட்டு கண்ணீர் வருவது உண்டு ஆனால், ஏதாவது படிக்கும் போது வெகு அரிதாகவே உள்ளம் பொங்கி கண் கலங்கும். இரண்டு இடங்களில் என்னை அறியாமல் என் கண்களில் தண்ணீர் வர செய்துவிட்டது.

கிருஷ்ணன் கோசலையினுள் செல்லும் போது, அம்மக்கள் அடையும் ஆனந்தம், அவனை ராமனாகவே பார்க்கும் மக்களில் நானும் ஒருவனாக சென்று அமர்ந்துவிட்டேன். கண்களில் கண்ணீர். ஏன் என்றுதான் தெரியவில்லை.

அதே போல் இறுதியில் காளிந்தி கையில் சியமந்தகம் வைக்கப்பட்டு அது வெறும் கல்லாக மாறுமிடமும் உள்ளத்தை நெகிழ்ச் செய்துவிட்டது. 

காளிந்தி கதை மட்டும் இன்னும் வரவில்லையே என்று நினைக்கும் போது அதை கண்ணன் வாய்மொழியாகவே செய்து விட்டீர்கள். 

நன்றி

ரெங்கசுப்ரமணி