Thursday, September 10, 2015

காண்டீபம்



ஜெ

கான்டீபத்திற்காகக் காத்திருக்கிறேன். சிறுவயது முதலே என் ஆதர்ச கதாநாயகன் அர்ஜ்ஜுனந்தான். வீரசாகசங்கள் மட்டும் அல்ல. அவன் ஒரு நேர் அம்பு மாதிரி. 'பார்த்தன்போல் விழியினால் விளக்குவாய்' என்ற வரி என்னை மிகுந்த மன எழுச்சி கொள்ளவைப்பது

சாரங்கன்



 சாரங்கன்,


காண்டீபம் நேற்று முதல் எழுதத்தொடங்கிவிட்டேன். 2 அத்தியாயங்கள் ஒரே நாளில். மூன்றாவது இன்று போய்க்கொன்டிருக்கிறது. முன்னர் இரன்டு வகையில் எழுதிப்பார்த்தேன். ஒரு அத்தியாயம் முழுமையாகவே எழுதப்பட்டது. சரிவர அமையவில்லை. இந்த அத்தியாயம் வளர்ந்து முழுமையடையும் என தெரிகிறது. சிலநாட்கள் நீண்ட ஒரு கொந்தளிப்பு மாறி நேற்றுமுதல் உற்சாகமாக ஆகிவிட்டேன். நேற்று முதல் இங்கே தினம் காலையில் மழையும் பெய்கிறது. நேற்று எழும்போது ஒரு நல்ல கனவு. கறுப்பாக ஒரு கேக் உண்டு அமெரிக்காவில். சாக்லேட் கேக். அதை தின்பதுபோல கனவு வந்து புன்னகையுடன் விழித்துக்கொண்டேன். உடனே கான்டீபம் எழுதத்தொடங்கிவிட்டேன்

 ஜெ