Sunday, February 7, 2016

உவமைகள்






ஜெ

வெண்முரசின் இந்த அத்தியாயத்தில் வந்துள்ள உவமைகள் எல்லாமே அற்புதமானவை

அன்னங்களின் கால்களை மனத்துக்கு உவமையாகச் சொன்னது சிறப்பானது

ஆனால் இளையகௌரவர்கள் ஆமைக்குஞ்சுகளைப்போல கரையேறுவது
பீமன் கௌரவர்களை நண்டு குஞ்சுகளைத் தூக்கி வருவதுபோல கொண்டுவருவது

பீமன் நீந்தும்போது தலையும் கால்களும் கொண்ட மிருகம்போலத் தோன்றுவது

ஏரி வாய்திறந்து அவர்களை அள்ளி அள்ளி விழுங்குவது
எல்லாமே நுட்பமானவை. ஒவ்வொன்றும் இவர்களெல்லாம் செத்துப்போகப்போகிறார்கள் என்பதையே சுட்டிநிற்கிறது.

 ஆமைக்குஞ்சுகளில் உயிர்பிழைக்கும் வாய்ப்பு 2 சதவீதம். நண்டுகளில் 1 சதவீதம். இவர்களுக்கு அதுகூட இல்லை

சண்முகம்