Saturday, September 17, 2016

பால் தயிர் ஆகுதல்

வணக்கம் ஜெமோ,

நேற்றிரவு  வெய்யோன்  படித்து முடித்தேன்... நிலையழிந்துக் கொண்டிருக்கிறேன்..

வெண்முகில் நகரின் கடைசி அத்தியாயங்கள் சடுதியில் முடிந்தன. தர்மரின் பட்டமேற்பு விரிவாக காட்டப்படவில்லை. 

எல்லோரையும் ஒன்று சேர்த்து கிருஷ்ணன் திருதிராட்டிரை பார்க்க அழைத்து செல்லும் போது உண்டான உவகை மட்டும் தெரிநத்து. மற்றபடி பாண்டவரின் உளநிலை பட்டவர்த்தனமாக காட்டப்படவில்லை.
இந்திரநீலத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக பாண்டவரைப் பற்றிய செய்திகள் வருகின்றன.

காண்டீபம் அர்ஜீனன் என்னும் தனி மனிதனின் பயணமே. இறுதியில் தர்மர், ஆடம்பரம் இன்றி அவை நடத்துவதும், பீமன் பெரும்பாலும் காட்டில் இருப்பதும், இளையோர் இருவரும் நகர் நிர்மாணிப்பில் ஈடுபடுவதும் தெரிய வருகிறது.

வெய்யோன் கர்ணனின் அங்க நாட்டு அணுபவங்களில் தொடங்கி அஸ்தினாபுரம் வருகிறது. இளையோரோடு குதூகலிக்கும் வேளையில் நுழைகிறான் பீமன்.

 இயல்பாகவே இளையோரைத் தழுவுகிறான், நூற்றுக்கணக்கில் திகழும் இளைய கௌரவர்களை கொஞ்சி மகிழ்கிறான்.  அவையில் கேள்வி எழும் போது சௌனகரின் வார்த்தைகள் என்று தெளிவாக சொல்கிறான். அவனுக்கும் சொல்லாடலுக்கும் வெகு தூரம்!!
சகுனியும் கணிகரும் குறுக்கிடும் போது இயல்பென சினம் கொள்கிறான்.

மாலையில் குழந்தைகளோடு நீராடும் போதும் கர்ணனிடம் அதிக பூச்சின்றி குந்தியின் செய்தியை சொல்கிறான். The same old simple Bheeman.

அப்புறம் ஏன் கடைசியில் அந்த விழிகளில் வஞ்சம்....

என்ன திரிபு நடந்தது..? 

தர்மர் அவையில் இருந்திருந்தால் அப்படி நடந்திருக்காது என்றும், நால்வரும் துளி கூட பதறவில்லை என்றும் துச்சாதனன் சொல்கிறான்....

பாண்டவரில் நடந்து விட்ட மாற்றம் தான் என்ன? ஏன்?

நீங்கள் திருதிராட்டிருக்கு உபயோகித்த அதே சொற்களில் கேட்கிறேன்... பால் எப்போது தயிர் ஆனது...

சுவேதா