Wednesday, September 21, 2016

சாதனை





ஜெ,

யோகஸாதனையில் ஜலசாதனை அக்னிஸாதனை என்று இரண்டு விஷயங்கள் உண்டு. ஜலஸாதனை தன்னை குளிர்வித்துப் பக்குவப்படுத்திக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக மேலே செல்வது. இதற்கு நாளாகும். சாமானியர்களுக்கு உரியது இது

தருமர் ஆற்றும் சாதனை அக்னிஸாதனை. இது மெய்ஞானம் கனிந்தபின்னர் அதை ஸாக்‌ஷாத்காரம் பண்ணுவதற்காக யோகிகள் செய்வது. இதைத்தான் பஞ்சாக்னி மத்தியிலே தபஸ் செய்வது என்று புராணங்கள் சொல்கின்றன.

மகாபாரதத்தில் சூரியனை தருமர் வழிபட்டு அக்‌ஷயபாத்திரத்தை அடைந்தார் என்று ஒரு இடம் வருகிறது. அதை இந்த அக்னி ஸாதனையாக ஆக்கியிருக்கும் நுட்பம் அழகானது

சுவாமி