Wednesday, September 21, 2016

நீலத்தின் கண்ணன்






அன்புள்ள ஜெ

நீலம் நாவலை இந்த இடைவெளியில் போய் வாசித்தேன். ஒவ்வொருமுறை வெண்முரசு முடியும்போதும் போய் நீலத்தை வாசிப்பது என் வழக்கம் அதில் என் மூளையை தூண்டிவிடும் ஒரு வரி அல்லது என் உணர்ச்சிகளை பாதிக்கும் ஒரு காட்சி எனக்குக் கிடைத்துவிடும். அதிலிருந்து நான் அன்றைய நாளை அழகாகக் கழித்துவிடுவேன்

எப்படி இருக்கிறீர்கள்? அடுத்த நாவலை யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? நீலத்தை வாசிக்கும்போதுதான் அந்த சின்னக்குழந்தை இத்தனையையும் செய்து ஆட்டுவிக்கிறது என்ற எண்ணம் வந்தது

அதேபோல சொல்வளர்காட்டில் வரும் கிருஷ்ணனின் துக்கத்தைப்பார்க்கையில் ராதையின் அந்த ஏக்கம் நினைவுக்கு வந்தது. ராதையைப்பிரிந்ததுதான் கிருஷ்ணனையும் துக்கப்படுத்துகிறது என்று நினைத்துக்கொண்டேன்

இந்தக்கிருஷ்ணன் அந்தக்கிருஷ்ணனின் ஒரு மறுபக்கம். அது குழந்தை. குழந்தைப்பருவத்தில் எல்லாருமே தெய்வங்கல் தானே?



சாரதா