Tuesday, September 20, 2016

பால்திரிந்தது எவ்வாறு



ஜெ

ஒரு வாசகி பால்திரிந்தது எவ்வாறு என கேட்டிருந்தார். நான் அந்தக்கேள்வியை எதிர்கொள்ளும்வரை அதைப்பற்றி எண்ணவே இல்லை. ஆனால் அதை வாசித்ததும் அந்தக்கோணத்திலே யோசித்தேன். முதல் விஷயம் அந்தக்கேள்வி ஏன் எனக்கு எழவில்லை என்பதுதான். அவ்வளவு கன்வின்ஸுங் ஆக அதிலே என்ன இருந்தது?

கதையை திரும்ப வாசித்துப்பார்த்தேன். நாடு பிரிவினை செய்யப்படுகிறது. அது பாண்டவர்களுக்கு ஒரு சின்ன மனவிரிசலை உருவாக்குகிறது. அவ்வளவுதான் இருக்கிறது. பீமன் எப்போதும்போலவே கர்ணனிடமும் துச்சாதனனிடமும் விலகலுடனும் கசப்புடனும்தான்  இருக்கிறான்

அந்த சின்ன விலகல் துரியோதனன் ஜராசந்தனுடன் இந்திரப்பிரஸ்தத்திற்கு வரும்போது கொஞ்சம் கூடுகிறது. சொல்லப்போனால் அந்த விரிசலில் இருந்து ஒரு பெரிய சந்தேகம் சட்டென்று எழுந்துவிடுகிறது. ஜராசந்தனை எதிர்கொள்ளாமல் இருவரும் திரும்பிப்போகிறார்கள்

அடுத்து விழாவில் விரிசலெல்லாம் கொஞ்சம் மறைந்து விடுகிறது. சந்தேகம் இருந்துகொண்டே இருந்தாலும் அதை மறைக்கிறார்கள் துரியோதனன் சறுக்கிவிழுகிறான். அதை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. துரியோதனனின் கோணத்தில்தான் அது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அவர்கள் அதை சாதாரணமாகவே எடுத்துக்கொள்கிறார்கள்

துரியன் மனம் கசந்து வன்மம் கொண்டு சூதுக்கு அழைக்கிறான். அப்போதும் பாண்டவ்ர்களுக்கு கௌரவர் மேல் விரோதமோ கசப்போ இல்லை. ஒரு சந்தேகமும் ஒட்டாத மனநிலையும் மட்டுமே இருக்கிறது

சூதில்தோற்று பாஞ்சாலியை அவமதிப்பதைக்கண்டு நிற்கும்போதுதான் சட்டென்று அத்தனையும் சேர்ந்து வன்மமாக ஆகிறது

ஆகவே பால் ஒரேநாளில் திரியவில்லை. மிகக்கொஞ்சமாக ஒரு அவநம்பிக்கை இருந்தது. அது சந்தர்ப்பங்களால் கொஞ்சம் வளர்ந்தது. சட்டென்று அது விஸ்வரூபம் எடுக்கிறது சபையில்

மகாதேவன்.