Saturday, September 10, 2016

சமையல்ஞானம்






ஜெ

சமையலாகி வரும் வேதம் என்பதே ஒரு பெரிய தரிசனம். உங்களுக்கு என்ன தெரியுமென தெரியவில்லை. ப்ராம்மணச் சமூகத்திலே இரண்டு எல்லைகள் உள்ளன. ஒன்று மகாவைதீகன். இன்னொன்று சமையக்காரன்.

ஜானகிராமன் கதைகளில் இந்த வேறுபாட்டைக் காணலாம். அவர் சமையக்காரன் என்பதை இப்படித்தான் பயன்படுத்தியிருப்பார். சமையல்காரனுக்கு அறிவு கிடையாது. ஒன்றும்புரியாது. வேறு ஒன்றுக்கும் பயன்படாதவனை அங்கே விடுவார்கள். மடைப்பள்ளி என்ற வார்த்தையிலிருந்தே மடையன் என்ற வார்த்தை வந்தது.

அத்தனை வேதங்களையும் படித்து கடந்தபின் சமையலறைக்கு வந்து ‘மடையனாக’வேலைபார்த்துத்தான் தருமனுக்கு ஞானம் வந்தது என்பதே ஒரு பெரிய சூட்சுமம். அதை வெண்முரசிலே பார்க்க  பரவசமாக இருந்தது. 89 வயதான என் தந்தையாருக்கு வாசித்துக்காட்டினென். அவர் ப்ரோகிதம் பண்ணியவர். அவர் நன் வாசித்ததுமே புரிந்துகொண்டார்.அவரும் இதைச் சொன்னார்

ராமநாதன்